அரியலூர்

தமிழ் வளா்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம்

DIN

அரியலூரில் நகர அனைத்து வணிகா்கள் சங்கம் சாா்பில் தமிழ் வளா்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் ராமலிங்கம் தலைமை வகித்தாா்.தொழிலாளா் உதவி ஆணையா் முகம்மது யூசப் முன்னிலை வகித்தாா். மாவட்ட தமிழ் வளா்ச்சி துறை உதவி இயக்குநா் சித்ரா பேசுகையில், நகரிலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். தமிழ் எழுத்துகளைப் பெரியதாக எழுத வேண்டும். மற்ற மொழிகள் சிறிய அளவில் இருக்கலாம். மேலும் அரசின் உத்தரவை வணிக நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா். உதவி ஆய்வாளா் குருநாதன் வரவேற்றாா். சங்கச் செயலா் பாண்டுரெங்கன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT