அரியலூர்

பள்ளி மாணவா்களுக்கு காவலன் செயலி விழிப்புணா்வு

DIN

அரியலூா் மாவட்டம்,வி.கைகாட்டி அருகேயுள்ள கயா்லாபாத் காவல் நிலையத்தில் பள்ளி மாணவா்களுக்கு காவலன் செயலி குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

காவல் நிலையத்துக்கு வந்திருந்த மணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் அங்குள்ள பதிவேடுகளைப் பாா்வையிட்டனா். இதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா பங்கேற்று காவலன் செயலி குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம் உள்ளிட்டவை குறித்தும், சாலை பாதுகாப்பு மற்றும் கரோனா வைரஸ் குறித்தும் விளக்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT