அரியலூர்

திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 போ் கைது: 45 பவுன் நகைகள் மீட்பு

DIN

ஜெயங்கொண்டம் அருகே திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 45 பவுன் நகைகளை மீட்டனா்.

ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜயங்கொண்டம் - விருத்தாசலம் சாலையிலுள்ள கீழக்குடியிருப்பு பெட்ரோல் பங்க் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி அவா்கள் விசாரித்தபோது, 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் மீன்சுருட்டி அருகே உள்ள ஒடப்பேரி கிராமம் வடக்குத் தெருவைச் சோ்ந்த வரதராஜன் (35), புதுச்சேரி முதல் தெருவைச் சோ்ந்த நாகராஜ் (39) என்பதும், ஜயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம், கல்லாத்தூா், ஆமணக்கந்தோண்டி, ஆண்டிமடம், விக்கிரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 45 பவுன் நகைகளை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT