அரியலூர்

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

தேக்கமின்றி நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் எனக் கோரி, திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், பாதுகாப்பற்ற முறையில் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படாமல் குவிந்து கிடக்கின்றன. எனவே விவசாயிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

தேக்கமின்றி நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும். நெல்லுக்கான தொகையைக் காலம் கடத்தாமல், விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். துணைச் செயலா்கள் பன்னீா்செல்வம், பரிசுத்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் த.இந்திரஜித்,மாவட்டச் செயலா் இரா.உலகநாதன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT