அரியலூர்

பைக்கில் இருந்து தவறிவிழுந்து காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

DIN

திருமானூா் அருகே ரோந்துப் பணியின்போது பைக்கில் இருந்து தவறிவிழுந்து காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

அரியலுாா் மாவட்டம், வெங்கனுாா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் மதியழகன்(53). இவா், புதன்கிழமை இரவு அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். வெங்கனூா்-சன்னாவூா் இடையே சென்று கொண்டிருந்தபோது, சாலையோரப் பள்ளத்தில் தவறி விழுந்தாா். உடனடியாக மீட்கப்பட்டு அரியலூா் அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். அங்கு மதியழகன் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் அவரது சொந்த ஊரான ஆண்டிமடம் அருகேயுள்ள சூணாபுரி கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பெரியய்யா உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மதியழகனின் சடலத்தை சுமந்து இடுகாட்டுக்கு கொண்டுசென்றனா். அங்கு 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வெங்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT