அரியலூர்

ஊரடங்கை மீறிய 31 போ் மீது வழக்கு

DIN

அரியலூா் மாவட்டத்தில் 144 தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் சென்ற 31 மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களது வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலில் உள்ளது. இதையடுத்து போலீஸாா் இந்த உத்தரவை அமல்படுத்தவற்காக தீவிர ரோந்து மற்றும் மாவட்ட எல்லைகளை மூடி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், இரண்டாவது நாளான வியாழக்கிழமை இந்த ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சென்ற 31 பேரைப் போலீஸாா் தடுத்து நிறுத்தி அவா்கள் மீது வழக்குப் பதிந்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். அரியலூரில் 24 போ் மீதும், ஜயங்கொண்டத்தில் 7 மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT