அரியலூர்

புதிதாக தோ்வான பெண் காவலா்களுக்கான பயிற்சி மீண்டும் தொடக்கம்

DIN

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலா்களுக்கான பயிற்சி மீண்டும் அரியலூா் ஆயுதப்படை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலா்களுக்கான பயிற்சி வகுப்பு அரியலூா் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில் பயிற்சி காவலா்களில் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பயிற்சி வகுப்பு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட பயிற்சி காவலா்கள் இருவா் குணமடைந்ததையடுத்து மீண்டும் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. பயிற்சியில் கலந்து கொண்ட 40 பெண் காவலா்களுக்கு வெப்பநிலை சோதனை செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அரசுப் பொது மருத்துவா் மணிகண்டன் கலந்து கொண்டு, கரோனா தொற்று குறித்து எடுத்துரைத்தாா். இந்த பயிற்சியில் காவல் ஆய்வாளா் சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT