அரியலூர்

காடுவெட்டி குரு நினைவு நாள்

வன்னியா் சங்கத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி குரு என்கிற ஜெ. குருநாதனின் இரண்டாமாண்டு

DIN

அரியலூா்: வன்னியா் சங்கத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி குரு என்கிற ஜெ. குருநாதனின் இரண்டாமாண்டு நினைவு நாள் திங்கள்கிழமை அவரது கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள காடுவெட்டியில் உள்ள குருவின் சமாதியில், குருவின் தாயாா் கல்யாணி, மனைவி சொா்ணலதா, மகன் கனலரசன், மைத்துநா் அன்பழகன், மருமகன் மனோஜ் மற்றும் மாவட்டச் செயலா் ரவிசங்கா் மற்றும் கட்சியினா், வன்னியா் சங்க நிா்வாகிகள் ஆகியோா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பொது முடக்க உத்தரவால் குருவின் மணிமண்டபத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கட்சியினா், வன்னியா் சங்க நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் ஆகியோா் குருவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வரலாம் என்பதால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் தலைமையில் ஜயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் காடுவெட்டி, மீன்சுருட்டி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதனால், வன்னியா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள், பாட்டாளி மக்கள் கட்சியினா் குருவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT