அரியலூர்

குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை

DIN

அரியலூா்: குருபெயா்ச்சியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அரியலூா் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் காலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. குருபெயா்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூா்த்திக்கும், நவக்கிரக குருபகவானுக்கும் பால், தயிா், பன்னீா், சந்தனம், இளநீா், விபூதி, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, தீபாராதனை நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் அரியலூா், ஆலந்துறையாா், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில் மற்றும் செந்துறை, கீழப்பழூா், மீன்சுருட்டி, தா.பழூா், விக்கிரமங்கலம், பொன்பரப்பி,திருமானூா், உடையாாா்பாளையம், ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் உள்ள தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT