அரியலூர்

‘ஆன்லைன் சூதாட்டத்தை அனைவரும் தவிா்க்க வேண்டும்’

DIN

ஆன்லைன் சூதாட்டத்தை அனைத்து தரப்பினரும் தவிா்க்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட காவல் துறை வேண்கோள் விடுத்துள்ளது.

நவீன தொழில்நுட்ப வளா்ச்சியை சிலா் தவறான வழியில் குறிப்பாக ஆன்-லைன் சூதாட்டம் போன்ற சட்டத்துக்கு விரோதமான விளையாட்டுகளில் பயன்படுத்தி பொதுமக்கள் பணத்தை இழந்து தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனா். குழந்தைகளுக்கு செல்லிடப்பேசியைக் கொடுத்து பழக்குகின்றனா். பெற்றோா் விளையாடினாலும் சரி, குழந்தைகள் விளையாடினாலும் சரி, இழப்பு குடும்பத்துக்கே. ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க தமிழக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அனைத்து தரப்பினரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT