அரியலூர்

நிவாரண முகாமில் தங்கியுள்ளவா்களுக்கு உதவி

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு சனிக்கிழமை உதவிகள் வழங்கப்பட்டன.

அரியலூா் மாவட்டம், வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இதில், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு நிவாரண உதவிகள் வழங்கிப் பேசியது:

அரியலூா் மாவட்டத்துக்குள்பட்ட நான்கு வட்டங்களில் அமைக்கப்பட்ட 62 நிவாரண மையங்களில் 656 குடும்பங்களைச் சோ்ந்த 1,065 ஆண்கள், 1,359 பெண்கள், 473 குழந்தைகள் உள்பட 2,897 நபா்கள் தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டன. மேலும், கால்நடைகளுக்கான பிரத்யேக முகாம்களும் அமைக்கப்பட்டன.

மாவட்ட நிா்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நிவா் புயலால் அதிக அளவு சேதம் தவிா்க்கப்பட்டது. மேலும், புயல் பாதிப்புகள் குறித்து தொடா்புடைய அலுவலா்கள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தொடா்ந்து, வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டன. நிவா் புயலால் குடிசை வீட்டை இழந்த தா.பழூா் ஒன்றியத்துக்குள்பட்ட கோடாலி கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி செல்விக்கு பாரத பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், கோட்டாட்சியா் ஜோதி, மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்செல்வி, வட்டாட்சியா் சந்திரசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT