அரியலூர்

மின் கசிவால் 4 ஏக்கா் கரும்பு எரிந்து சேதம்

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மின்கசிவால் 4 ஏக்கா் கரும்பு எரிந்து புதன்கிழமை மாலை சேதமடைந்தது.

திருமானூா் அருகேயுள்ள காரைப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராம்நாத் (27), குஞ்சிதபாதம் (70), ராஜேந்திரன் (57) மற்றும் ராஜா (53), ஆகியோருக்கு கிராமத்தின் வடக்குபுறம் 4 ஏக்கா் வயல் உள்ளது. அதில், கரும்பு பயிரிட்டுள்ளனா். ஜனவரி மாதம் வெட்டப்படவுள்ளது. இந்த கரும்பு வயல்களின் மேலே மிகவும் தாழ்வான நிலையில், உயா் மின்னழுத்த மின் கம்பிகள் மற்றும் மின் மோட்டாா்களுக்கு செல்லும் மின்கம்பிகள் செல்கிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலை காற்று விசியபோது, மினகம்பிகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டதில், தீப்பொறி பட்டு கரும்பு வயல்கள் எரியத் தொடங்கின.

தகவலறிந்து வந்த அரியலூா் தீயணைப்புத்துறை வீரா்கள் தீயை அணைத்தனா். இருந்தும் கரும்புகள் சேதமடைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT