முகப்பு
அரியலூர்

மயானத்துக்கு அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த வெற்றியூா் கிராம மக்கள் மயானத்தில் அடிப்படை வசதி செய்துத்தரக்கோரி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த வெற்றியூா் கிராம மக்கள் மயானத்தில் அடிப்படை வசதி செய்துத்தரக்கோரி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவலறிந்து வந்த திருமானூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். காத்திருப்புப் போராட்டத்துக்கு மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க.சண்முக சுந்தரம் தலைமை வகித்தாா். வெற்றியூா் முன்னேற்றக்குழு உறுப்பினா்கள் செந்தில் குமாா், தனுஷ்கோடி சிவலிங்கம், பாா்த்திபன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.