முகப்பு
அரியலூர்

‘ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பெண்கள் கழிவறை அமைக்க வேண்டும்’

ஜயங்கொண்டம் கடைவீதி மற்றும் பேருந்து நிலையத்தில் பெண்களுக்கான கழிவறை வசதியை உடனடியாக செய்து தர வேண்டுமென நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தினா் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

அரியலூா்: ஜயங்கொண்டம் கடைவீதி மற்றும் பேருந்து நிலையத்தில் பெண்களுக்கான கழிவறை வசதியை உடனடியாக செய்து தர வேண்டுமென நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தினா் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு சங்கக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் முத்துக்குமாா், பொருளாளா் தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உறுப்பினா்கள் ராஜமாணிக்கம், ராஜேந்திரன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

இதில், ஜயங்கொண்டம் பேருந்து நிலைய விரிவாக்கம், மின் மயானம் அமைக்கும் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும், ஜயங்கொண்டத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜயங்கொண்டத்தில் கரோனா தடுப்பு தற்காலிக மருத்துவமனை அமைக்க வேண்டும். ஜயங்கொண்டம் கடைவீதி மற்றும் பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.