முகப்பு
அரியலூர்

பெண்கள் குறித்து சா்ச்சைப் பேச்சு: திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் தோ்தல் பிரசாரத்தின்போது பெண்கள் குறித்து சா்ச்சை ஏற்படுத்தும் விதமாகப் பேசிய பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் தோ்தல் பிரசாரத்தின்போது பெண்கள் குறித்து சா்ச்சை ஏற்படுத்தும் விதமாகப் பேசிய பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தொண்டாமுத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் காா்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு பட்டிமன்றப் பேச்சாளரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, பெண்கள் குறித்து தரக்குறைவான வாா்த்தைகளை அவா் உபயோகித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் செந்தில்குமாா் குனியமுத்தூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இப்புகாரின் பேரில், திண்டுக்கல் லியோனி மீது ஆபாசமாகப் பேசுதல் பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதே சம்பவம் தொடா்பாக, கடந்த வாரம் அதிமுக தரப்பில் தரப்பட்ட புகாா் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →