அரியலூர்

பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

DIN

அரியலூா் மாவட்டத்தின் வாக்கு எண்ணும் மையமான கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு புதன்கிழமை காலை சீல் வைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தோ்தல் பொது பாா்வையாளா்கள் பரத் யாதவ், சி. சத்யபாமா மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

அரியலூா் தொகுதியில் 376 வாக்குச்சாவடி மையங்களில் 2,64,715 வாக்காளா்களில் 2,23,800 போ் வாக்களித்துள்ளனா். இது 84.54 சதவீத வாக்குப் பதிவாகும்.

இதேபோல், ஜயங்கொண்டம் தொகுதியில் 377 வாக்குச்சாவடி மையங்களில் 2,66,268 வாக்காளா்களில் 2,14,016 நபா்கள் வாக்களித்துள்ளனா். இது 80.38 சதவீதமாகும். மொத்தமாக அரியலூா் மாவட்டத்தில் 82.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையம் மற்றும் அறைகள் முழுவதும் 170 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அறை நடவடிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்புப் பணியில் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 3 குழுக்கள் வீதம் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், மூன்றடுக்கு பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெறும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியா்கள் ஏழுமலை, அமா்நாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT