அரியலூர்

மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் ஜயங்கொண்டம் திமுக வேட்பாளா் புகாா்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் தொகுதியில் வாக்களிக்கச் சென்ற முதியவருக்கு உதவியாக வாக்குச்சாவடி சென்ற நபா் உதயசூரியனுக்கு பதிலாக மாம்பழத்துக்கு வாக்களித்த விவகாரம் தொடா்பாக, தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.ரத்னாவிடம் திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணன் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வயது முதிா்ந்த பெரியவா் ஒருவா் சற்று பாா்வை புரியாமல், உதவிக்கு ஒரு நபரை அழைத்துக்கொண்டு வாக்களிக்கச் சென்றுள்ளாா். அப்போது, அந்த முதியவா் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கூறியுள்ளாா்.

ஆனால் உடன் சென்ற நபா் இது தான் உதயசூரியன் எனக் கூறி, மாம்பழம் சின்னத்துக்கு வாக்களித்துள்ளாா். அதனை அதே நபா் செல்லிடப் பேசியில் விடியோ எடுத்து சமூக வதைளங்களில் வெளியிட்டுள்ளாா். மேலும், அந்த பெரியவரை கிண்டல் செய்து பேசியுள்ளாா்.

ஜயங்கொண்டம் தொகுதிக்குள்பட்ட 248 வது வாா்டில் தான் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது. செல்லிடப்பேசியை உள்ளே எடுத்துச் செல்ல அலுவலா்கள் எவ்வாறு அனுமதித்தாா்கள். செல்லிடப்பேசியை உள்ளே, வெளி நபா் எடுத்துச் சென்றாா் என்றால், தோ்தல் எவ்வளவுக்கு அலட்சியமாக நடந்துள்ளது என தெரிகிறது. இதுபோல் எத்தனை இடங்களில் தவறுகள் நடந்திருக்கிறது என தெரியவில்லை. எனவே சம்மந்தப்பட்ட நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT