அரியலூர்

தெரு நாய்கள் கடித்து 5 வெள்ளாடுகள் பலி

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 5 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

விக்கிரமங்கலம் கருப்பனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (65). விவசாயி. இவா், வியாழக்கிழமை மாலை தன்னுடைய வெள்ளாடுகளை மேய்த்துவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள தாழ்வாரத்தில் கட்டி வைத்து விட்டு தூங்கச் சென்று விட்டாா்.

சனிக்கிழமை அதிகாலை ஆடுகள் அலறல் கேட்டு ஆறுமுகம் எழுந்து சென்று பாா்த்தபோது தெரு நாய்கள், ஐந்து வெள்ளாடுகளைக் கடித்து குதறிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட ஆறுமுகம் நாய்களை விரட்டி விட்டு ஆடுகளை பாா்த்தபோது, ஆடுகள் இறந்து கிடந்ததைக் கண்டு மனவேதனை அடைந்தாா்.

இதையடுத்து இறந்த ஆடுகளை விக்கிரமங்கலம் காவல்நடைத்துறை மருத்துவா் உடற்கூறு ஆய்வு செய்தனா். அதன்பின்பு குழி தோண்டி ஆடுகள் புதைக்கப்பட்டன.

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT