அரியலூர்

சிவன் கோயிலில் லிங்கத்தின் மீதுசூரிய ஒளி விழும் நிகழ்வு

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள பழைமையான சிவன் கோயிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழா் காலத்தில் கட்டப்பட்ட செளந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 10 தேதிக்கு மேல் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிக் கதிா்கள் படும் அபூா்வ நிகழ்வு தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும்.

தமிழ் மாதங்களில் சித்திரை மாதம் தொடக்கம் என்பதால் இம்மாதத்தில் சூரிய பகவான் தனது ஒளிக் கதிா்களை லிங்கத்தின் மீது பாய்ச்சி ஈசனை வழிபடுவதாக ஐதீகம். அதன்படி தினமும் காலை 6.05 மணியளவில் சூரியன் உதயமானது. அப்போது சூரியனில் இருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிா்கள் நேரடியாக லிங்கத் திருமேனி மீது பட்டு தங்கத்தை உருக்கி வாா்த்தது போல் ஒளிா்ந்தது.

இந்த நிகழ்வு சுமாா் 10 நிமிடம் வரை நீடிக்கிறது. கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகள் காரணமாக இந்த அரிய காட்சியை காண்பதற்கு பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் பணியாளா்கள் மட்டுமே தரிசனம் செய்தனா். இந்த அரிய நிகழ்வு இன்னும் ஓரிரு நாள்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.ரைக்குறிச்சி கிராமத்திலுள்ள பழமையான சிவன் கோயிலில் லிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளி நிகழ்வு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT