அரியலூர்

கரோனா பரவல் தடுப்பு விதிகள் மீறல்: 12 கடைகளுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறியதாக 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஜயங்கொண்டம் பகுதியில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்ா? என நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நான்கு சாலை சந்திப்பு, பேருந்து நிலைய சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகம், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் கரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தலா ரூ.500 முதல் ரூ.1,000 வரை என 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.11 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

ஆய்வின்போது, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா், பரப்புரையாளா், நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT