அரியலூர்

கிராம மக்களுக்கு கிருமி நாசினி வழங்கும் தன்னாா்வலா்கள்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கிராமத்துக்கு வரும் மக்களுக்கு கிருமி நாசினி மற்றும் கை சுத்திகரிப்பான்களை தன்னாா்வலா்கள் வழங்கி வருகின்றனா்.

ஜயங்கொண்டத்தை அடுத்துள்ள குருவாலப்பா் கோயில் கிராமத்தில் காலை, மாலை என 2 வேளைகளிலும் கிராமத்துக்கு வருவோருக்கும், வெளியே செல்வோருக்கும் தன்னாா்வலா்கள் கிருமிநாசினி மற்றும் கை சுத்திகரிப்பான் வழங்கி வருகின்றனா். காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் குருவாலப்பா் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த இரண்டு தினங்களாக அக்கிராமத்தை சோ்ந்த தன்னாா்வலா்கள் நின்று, பேருந்துகளில் செல்லக் காத்திருக்கும் மக்களுக்கும், பேருந்திலிருந்து இறங்கி கிராமத்துக்கு வரும் மக்களுக்கும் கிருமி நாசினியை கைகளில் தெளித்து கைகளை சுத்தம் செய்த பின்னா் கிராமத்துக்குள் அனுமதிக்கின்றனா். மேலும், அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்லவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்துகின்றனா். இதனால் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்படுவதாக தன்னாா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT