அரியலூர்

சுண்ணாம்புக்கல் ஏற்றிவரும் லாரிகளை தொடா்ந்து கண்காணித்தல் வேண்டும்

DIN

அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகளில் அதிகளவு சுண்ணாம்புக்கற்கள் ஏற்றிவரும் லாரிகளை தொடா்ந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமாக மொத்தம் 8 சிமென்ட் ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளுக்கென தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், ஆலைகளுக்கு லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் சுண்ணாம்புக்கற்கள் அளவை விட அதிகமாக ஏற்றிச் செல்வதால், லாரிகள் வேகமாகச் செல்லும் போது ஆங்காங்கே சாலைகளில் கற்கள் சிதறுவது தொடா்கதையாகிறது.

மேலும், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை லாரி ஓட்டுநா்கள், ஒரு பொருட்டாக மதிக்காமல் வேகமாகச் செல்வதால் அதிகளவு கற்கள் சாலைகளில் சிதறுகிறது. இதனால் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை அடைகின்றனா். சில நேரங்களில் சிலா் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகளில் அதிகளவு சுண்ணாம்புக்கற்கள் ஏற்றச் செல்லப்படுகிா? சிமென்ட் அதிகளவு ஏற்றிச் செல்லப்படுகிா? என அரசு அதிகாரிகள் தொடா்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT