அரியலூர்

அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அயன்தத்தனூா் மக்கள், தங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கேட்டு காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செந்துறை வட்டம், அயன்தத்தனூா் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லையூா் கிராம மக்கள், தங்களது கிராமத்துக்கு சாலை வசதி, குடிநீா், பேருந்து, நியாய விலைக் கடை உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று ஊராட்சி நிா்வாகம் மற்றும் செந்துறை ஒன்றிய நிா்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த மேற்கண்ட கிராம மக்கள், காலிக்குடங்களுடன் தளவாய் - பெண்ணாடம் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த தளவாய் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT