அரியலூர்

ஏலச் சீட்டு மோசடி:பாதிக்கப்பட்டோா்ஆட்சியரிடம் மனு

DIN

தோகைமலை அருகே ஏலச் சீட்டு நடத்தி மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனுஅளித்தனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அடுத்த கீழவெளியூா் பிள்ளையாா்கோவில்பட்டியில் வசிக்கும் சரவணன், ஜானகி என்ற இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனா். இவா்களிடம் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சோ்ந்துள்ளனா். இதையடுத்து கரோனா பொதுமுடக்க காலத்தில் ஏலச்சீட்டை நிறுத்தியுள்ளனா். இதையடுத்து பணம் கட்டியவா்கள் தங்களது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனா். ஆனால், சரவணன், ஜானகி இருவரும் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளனா். இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் தோகைமலை காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் ஆகியோரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு பாதிக்கப்பட்ட சுமாா் 20க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கரிடம், தங்களது பணத்தை மீட்டுத் தரக் கோரி மீண்டும் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT