கரைவெட்டி பரதூா் கிராமத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 
அரியலூர்

பாதிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்

அரியலூா் மாவட்டம் திருமானூா், கரைவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி, பாளையப்பாடி, ஏலாக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது சம்பா நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.

DIN

அரியலூா் மாவட்டம் திருமானூா், கரைவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி, பாளையப்பாடி, ஏலாக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது சம்பா நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய அப்பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரைவெட்டி பரதூா் கிராமத்தில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தில், மழையால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்ய மறுக்கின்றனா் எனக்கூறி கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மழையால் பாதிக்கப்பட்ட நெல், பூஞ்சான் நோய் தாக்கப்பட்ட நெல் ஆகியவற்றை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT