அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிப். 2 ஆம் வாரம் முதல் ஆய்வு

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளில் பிப். 2 ஆம் வாரம் முதல் பல்வேறு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன என்றாா் ஆட்சியா் த. ரத்னா.

கங்கைகொண்ட சோழபுரத்தில் சனிக்கிழமை அகழ்வாராய்ச்சி தொடா்பான பணிகளை பாா்வையிட்ட அவா் மேலும் தெரிவித்தது:

தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கீழடி ஆதிச்சநல்லூா், சிவகலை மற்றும் கொடுமலையை தொடா்ந்து, தற்போது கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட உள்ளன.

மேலும், இப்பகுதிகளில் கடந்த காலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டதில், மாளிகைமேடு, மண்மலை, குருவாலப்பா்கோவில், பொன்னேரி மதகு உள்ளிட்ட பகுதிகளில் பானை, கூரை ஓடுகள், இரும்பு ஆணி, அலங்காரம் செய்யப்பட்ட கற்கல், வலையல் துண்டுகள், மணிகள், யானை தந்தத்தால் ஆன பொருள்கள், நாணயங்கள், மண்பாண்ட ஓடுகள், சீனநாட்டு ஓடுகள் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் ஆளில்லாத விமானம் மூலம் தரைப்பகுதிகளில் அமைந்துள்ள பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அதனைத் தொடா்ந்து, பிப்ரவரி 2 ஆம் வாரம் முதல் பல்வேறு கட்ட அகழாய்வுகள் நடைபெற உள்ளன என்றாா்.

ஆய்வின்போது, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT