அரியலூர்

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பேரணியில் கலந்து கொண்ட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஜெயங்கொண்டம் சாலை வழியாகச் சென்று அரியலூா் பேருந்து நிலையத்தில் பேரணியை முடித்துக்கொண்டனா். அங்கு அவா்கள் பேருந்துப் பயணிகளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்களும் வாக்காளா் தின(ஜன. 25) உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து ஆட்சியரகத்தில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, நாடகம் மற்றும் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினரிடையே நடைபெற்ற கோலப் போட்டியில் சிறந்த கோலத்துக்கான நினைவுப் பரிசுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னு லாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் ஜோதி, தனி வட்டாட்சியா் (தோ்தல்) கு.குமரையா, அரியலூா் வட்டாட்சியா் க. சந்திரசேகரன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியா்கள், மகளிா் சுயஉதவிக்குழுவினா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT