அரியலூர்

தடையை மீறி ஆட்டுச்சந்தை நடத்திய 2 போ் மீது வழக்கு

DIN

அரியலூா் அருகே கரோனா பொதுமுடக்கத்தை மீறி ஆட்டுச்சந்தை நடத்தியவா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், வாரச்சந்தைகள் உள்பட பல்வேறு இடங்கள் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூரை அடுத்த அமினாபாத் கிராமத்தில் அரியலூரைச் சோ்ந்த சசிக்குமாா் மற்றும் குமாா் ஆகியோா் கரோனா விதிமுறைகளை மீறி ஆட்டுச் சந்தை நடத்துவதாக ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், வருவாய்த் துறையினா் மேற்குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மீறியதாக கயா்லாபாத் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, சசிக்குமாா், குமாா் ஆகிய இருவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT