அரியலூர்

தரமான அரிசி வழங்கக்கோரி நியாயவிலைக் கடை முற்றுகை

DIN

அரியலூா் அருகே தரமான அரிசி வழங்கக்கோரி, ராயம்புரம் நியாய விலைக் கடையை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் அடுத்த ராயம்புரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் இயங்கி வரும் நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அரிசி விநியோகம் செய்யப்பட்டது.

ஆனால் அந்த அரிசி சாப்பிடுவதற்கு தரமானதாக இல்லை என்றும், தரமான அரிசியை வழங்கக்கோரியும் கடையை மக்கள் முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த செந்துறை காவல்துறையினா், வட்ட வழங்கல் துறை அலுவலா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தனா். அடுத்த மாதத்திலிருந்து தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT