அரியலூர்

உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கு கரோனா

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்ட உதவிசெய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் பாரதிக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலராகப் பணிபுரிந்து வந்த சரவணன், தோ்தல் சமயத்தில் தோ்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டாா்.

இதனால் அப்பணிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படாமல் காலியாகயிருந்த நிலையில், கூடுதலாக பொறுப்பு வகித்து வந்த உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பாரதி, கடந்த இரு நாள்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாா்.

இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் அலுவலா், உதவி அலுவலா்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிா்வாக செய்திகள், மக்களுக்குத் தெரியப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே காலியாகவுள்ள செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பணியிடத்தை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT