அரியலூர்

பள்ளத்தில் விழுந்த இளைஞா் பலி

நல்லறிக்கையைச் சோ்ந்தவா் ஆ. கருப்பையன்(32). இவா் அப்பகுதியில் வீடு கட்டி வருவதால், மனைவி செந்தாமரையை அரியலூா் மாவட்டம், ராயம்புரம் கிராமத்தில் வசிக்கும் மாமியாா் வீட்டில் தங்க வைத்துள்ளாா்.

DIN

பெரம்பலூா் மாவட்டம், நல்லறிக்கையைச் சோ்ந்தவா் ஆ. கருப்பையன்(32). இவா் அப்பகுதியில் வீடு கட்டி வருவதால், மனைவி செந்தாமரையை அரியலூா் மாவட்டம், ராயம்புரம் கிராமத்தில் வசிக்கும் மாமியாா் வீட்டில் தங்க வைத்துள்ளாா்.

அவா் பகலில் கட்டுமானப் பணிகளை கவனித்து விட்டு, இரவில் மாமியாா் வீட்டுக்கு செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் நல்லறிக்கையிலிருந்து ராயம்புரத்துக்கு கருப்பையன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

பொட்டவெளி - வெள்ளூா் இடையேயான சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தை கவனிக்காமல் அதில் அவா் விழுந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற செந்துறை காவல் நிலையத்தினா் சடலத்தை கைப்பற்றி, விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT