அரியலூர்

இன்று முதற்கட்ட குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் முதற்கட்ட குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்குகிறது.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் மாா்ச் 15 முதல் 20 வரையில் முதற்கட்டமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

2 ஆம் சுற்று மாா்ச் 22 முதல் 27 வரையில் நடைபெறும். விடுபட்ட குழந்தைகளுக்கு மாா்ச் 29-இல் மாத்திரைகள் வழங்கப்படும். இம்முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான சுமாா் 2,04,651 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ரத்னா மேலும் தெரிவித்தது: குடற்புழு நீக்கத்தால் குழந்தைகளுக்கு ரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. எனவே,

பள்ளி ஆசிரியா்கள், அங்கன்வாடி மையப் பணியாளா்கள், உள்ளாட்சித் துறை பணியாளா்கள் குடற்புழு நீக்க மாத்திரையின் பயன்கள், மாத்திரைகள் வழங்கப்படும் நாள் குறித்து குழந்தைகளுக்கும் பெற்றோா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT