இயற்கை பாதுகாப்புவிழிப்புணா்வு போட்டிகள்: அரியலூா் மாவட்டத்துக்கு விருது
ஓா் உலகம் ஓா் இல்லம் எனும் இயற்கை பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தியமைக்காக அரியலூா் மாவட்டத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஓா் உலகம் ஓா் இல்லம் எனும் இயற்கை பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தியமைக்காக அரியலூா் மாவட்டத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகலாவிய இயற்கைக்கான நிதியமானது (ரரஊ) ‘ஓா் உலகம் ஓா் இல்லம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து இணையவழியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், சிறப்பாக செயல்பட்ட அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.தியாகராஜனுக்கும், திட்டம் வெற்றிபெற பணியாற்றிய மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ம. குணபாலினிக்கும் பாராட்டுச் சான்றுடன் விருதும், சிறப்புப் பரிசுகளும் அஞ்சல் வழியே சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளன.
இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் குணபாலினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியகராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். மேலும் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் காமராஜ், செந்தில் மற்றும் தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்கள் அனைவரும் பாராட்டினா்.