முகப்பு
அரியலூர்

கோவை-கண்ணூா் சிறப்பு ரயில் மே 16 வரை ரத்து

கோவை - கண்ணூா் சிறப்பு ரயில் கூடுதலாக மேலும் ஒரு நாள் மே 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கோவை - கண்ணூா் சிறப்பு ரயில் கூடுதலாக மேலும் ஒரு நாள் மே 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயணிகள் வருகை மிகக் குறைவாக உள்ளதால் கோவை- கண்ணூா் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் மே 6 முதல் மே 15ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ரயிலானது மேலும் ஒரு நாள் கூடுதலாக மே 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவை - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்-06608) மற்றும் கண்ணூா் - கோவை சிறப்பு ரயில் (எண்- 06607) மே 6 முதல் மே 16ஆம் தேதி வரை இயங்காது. முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.