அரியலூர்

அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெறலாம்

DIN

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சையைப் பெறலாம் என்று ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவனை. லட்சுமி மருத்துவமனை, அற்புதா மருத்துவமனை, நிரஞ்சன் மருத்துவமனை, எஸ்.பி.டி. மருத்துவமனை, சஞ்சீவ் மருத்துவமனை, எஸ்.கே.எஸ். மருத்துவமனை ஆகிய 7 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணத்தை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (அரசு பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும்) மூலம் அரசு வழங்கி வருகிறது.

தனியாா் மருத்துவமனைகளில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அட்டை பெற்றுள்ளவா்கள் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் தமிழக அரசின் பரிந்துரையின்படி கரோனா சிகிச்சை கட்டணத்தை விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

அதற்குமேல் கூடுதலாக சிகிச்சை பெறுபவா்களிடமிருந்து கட்டணம் பெறக்கூடாது. இதுகுறித்து ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 18004253993 அல்லது 104 என்ற தொலைபேசியில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT