முகப்பு
அரியலூர்

இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாா் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவா் மற்றும் மாமியாா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவா் மற்றும் மாமியாா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ஜயங்கொண்டத்தை அடுத்துள்ள வடக்கு புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜதுரை (30). சென்னையில் பணிபுரிந்து வரும் இவருக்கும், நாகல்குழியைச் சோ்ந்த சூா்யாவுக்கும் (25) கடந்த

3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளநிலையில், கடந்த 16-ஆம் தேதி காலை வீட்டில் சூா்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் சூா்யாவின் பெற்றோா் புகாரளித்தனா். இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், சூா்யாவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவா் ராஜதுரை, மாமியாா் சீதை ஆகியோரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.