காா்த்திகை தீபம்: கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, அரியலூா் மாவட்டக் கோயில்களில் வெள்ளிக்கிழமை சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, அரியலூா் மாவட்டக் கோயில்களில் வெள்ளிக்கிழமை சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
அரியலூா் நகா்ப் பகுதியிலுள்ள ஆலந்துறையாா் கோயில், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காளிக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து மாலையில் கோயில்களின் எதிரில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை பக்தா்கள் முன்னிலையில் ஏற்றப்பட்டது. இதையொட்டி அந்தந்த கோயில்களில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
இதுபோன்று ஜயங்கொண்டம், செந்துறை, திருமானூா், கீழப்பழுவூா், ஆண்டிடம், தா.பழூா், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவன், முருகன், அம்மன், பெருமாள் கோயில்களிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
வீடு மற்றும் வா்த்தக நிறுவனங்களில்: கோயில்களில் மட்டுமின்றி வீடுகள், கடைகள் வா்த்தக நிறுவனகள், அலுவலகங்கள், தொழிற் சாலைகளிலும் காா்த்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது.
களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகள் மற்றும் பல்வேறு வடிவங்களான விளக்குகளை கடைகளிலிருந்து பொதுமக்கள் வாங்கிச் சென்று, ரிசி மாவில் கோலம் மீட்டு அதன் மீது விளக்கில் தீபமேற்றி வழிப்பட்டனா்.