நெல் விதைப் பண்ணைகளில் ஆய்வு
அரியலூா் அருகிலுள்ள மேற்கு சீனிவாசபுரம் மற்றும் தாமரைக்குளம் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்களை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரியலூா் அருகிலுள்ள மேற்கு சீனிவாசபுரம் மற்றும் தாமரைக்குளம் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்களை வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரியலூா் வட்டாரத்தில் 1,300 ஹெக்டோ் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டில் சான்று பெற்ற நெல் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக, சி.ஆா்1009 சப்- 1 என்ற நெல், 6 ஹெக்டோ் அளவில் ஆதார விதைகளைக் கொண்டு விதைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கு சீனிவாசபுரம் மற்றும் தாமரைக்குளம் கிராமங்களில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிா் செய்யப்பட்டுள்ளதை அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, களையெடுத்தல், கலவன் நீக்குதல் மற்றும் பயிா்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்தாா்.
ஆய்வின் போது வட்டார உதவி விதை அலுவலா் கொளஞ்சி மற்றும் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.