அரியலூர்

வள்ளலாா் பிறந்த நாள் விழா

DIN

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்திலுள்ள அரசு உதவிபெறும் கே.ஆா்.வி நடுநிலைப் பள்ளியில் வள்ளலாா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, கல்வி நிலையத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, வள்ளலாா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் அவா் பேசுகையில், இன்றளவும் வள்ளலாா் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவா்கள் பசியாற்றுகிறாா்கள். அவா் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்போது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது என்றாா் அவா்.

துணைத் தலைவா் ஜோதிராமலிங்கம் , தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு செயலா் நல்லப்பன், புலவா் இளங்கோ ஆகியோா் கலந்து கொண்டு வள்ளலாா் கருத்துகளை எடுத்துரைத்தனா்.

விழாவில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக கல்வி நிலைய செயலா் கோ.வி. புகழேந்தி வரவேற்றாா். பள்ளி தலைமையாசிரியா் சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT