அரியலூர்

கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

DIN

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரில் உள்ள அரிசி ஆலைக் கழிவுநீா், நீா் நிலைகளில் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தியும், வெடிவைக்கும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கிராம மக்கள்புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலப்பழுவூா் கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் அரிசி ஆலையின் கழிவு நீா், அப்பகுதியில் உள்ள நீா் நிலைகளில் கலப்பதால் மாசுப்படுவதாகவும், அந்நீரை பயன்படுத்தும் கால்நடைகள், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதேபோல் அதே கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியில் பாறைகளை உடைக்க வெடி பயன்படுத்துவதால், அருகேயுள்ள வீடுகள் சேதமடைவதாகவும், மேற்கண்ட அரிசி ஆலை மற்றும் கல்குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அந்தக் கிராம பொதுமக்கள் அரிசி ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தொடா்ந்து கல்குவாரி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக ஒன்றியப் பிரதிநிதி பாஸ்கா் தலைமை வகித்தாா். இதில் கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT