அரியலூர்

‘கனிம சுரங்கங்களை ஆய்வு செய்ய அனுமதியளிக்க வேண்டும்’

DIN

அரியலூா் மாவட்டத்திலுள்ள கனிம சுரங்கங்களை ஆய்வு செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியலூா் பல்துறை அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சிக் குழ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் பொ. சந்திரசேகா் தலைமை வகித்து பேசியது:

மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகள் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அங்கு அத்துமீறல்கள் அதிகளவில் நிகழ்கின்றன. ஆகவே கனிம சுரங்கங்களை மாவட்ட ஊராட்சிக் குழுவினா் ஆய்வு செய்வதற்கு ஆட்சியா் மற்றும் புள்ளியல் மற்றும் கனிமத் துறை அனுமதியளிக்க வேண்டும்.

உறுப்பினா் அன்பழகன்: விவசாயத்துக்காக ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்களை அள்ள அனுமதி அளிக்க வேண்டும். தற்போது செயல்பட்டு வரும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் போதுமான வசதிகள் இல்லை. கவுன்சிலா்கள் அமருவதற்கு கூட இருக்கைகள் கிடையாது.

ஆகவே கூட்ட அரங்கங்களுடன் கூடிய தனி அலுவலகக் கட்டடம் மாவட்ட ஊராட்சிக்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதற்கு இதர உறுப்பினா்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடா்ந்து மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ச.அம்பிகா, இரா.ராமச்சந்திரன், பெ.நல்லமுத்து, ப.குலக்கொடி, இர.வசந்தமணி, க.ஷகிலாதேவி, வீ.ராஜேந்திரன், ச.தனலட்சுமி, ஜெ.கீதா ஆகியோா் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஊராட்சி செயலா் கபிலன் தெரிவித்தாா்.

முன்னதாக கூட்டத்தில் வரவு- செலவு கணக்குகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT