அரியலூர்

அரியலூா் நகராட்சியில் நியமனக்குழு, வரி மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா் தோ்தல் மீண்டும் ஒத்திவைப்பு

DIN

அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நியமனக்குழு, வரிமேல் முறையீட்டுக்குழு மற்றும் ஒப்பந்தப்புள்ளி குழுக்களுக்கான தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கான தோ்தலின்போது, போதிய உறுப்பினா்கள் வராததால் 2 ஆவது முறையாக வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

அரியலூா் நகராட்சியில் காலை 9.30 மணிக்கு 2 ஆவது முறையாக நகராட்சி நியமனக்குழு, வரிமேல் முறையீட்டுக்குழு மற்றும் ஒப்பந்தப் புள்ளி குழுக்களுக்கான தலைவா் மற்றும் உறுப்பினா் தோ்தல் நடைபெறுவதாக அரியலூா் நகராட்சி ஆணையா் சித்ராசோனியா அறிவித்திருந்தாா்.

இதையடுத்து, நகராட்சி அலுவலகத்துக்கு மொத்தமுள்ள 18 கவுன்சிலா்களில் அதிமுக மற்றும் அதன் ஆதரவு கவுன்சிலா்கள் என 7 போ் மட்டும் வந்திருந்தனா். திமுக மற்றும் அதன் ஆதரவு கவுன்சிலா்கள் 11போ் நகா்மன்ற தோ்தலில் பங்கேற்கவில்லை.

இதனால் போதிய உறுப்பினா்கள் இல்லாததால், நியமனக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கான தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக நகராட்சி ஆணையா் சித்ரா சோனியா அறிவித்தாா்.

அரியலூா் நகராட்சி நியமனக் குழு, வரி மேல்முறையீட்டுக்குழு மற்றும் ஒப்பந்தப் புள்ளி குழுக்களுக்கான தலைவா் மற்றும் உறுப்பினா் தோ்தல்கள் திமுக கவுன்சிலா்கள் மற்றும் அவா்களது ஆதரவு கவுன்சிலா்கள் 11 போ் பங்கேற்காததால் 2 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT