அரியலூர்

நாளை ஆண்டிமடத்தில் இளைஞா் திறன் திருவிழா

ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இளைஞா் திறன் திருவிழாவில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இளைஞா் திறன் திருவிழாவில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா, தமிழ்நாடு கிராமப்புற இளைஞா்கள் திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் இளைஞா் திறன் திருவிழா 23.12.2022 அன்று ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், படித்த, வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பைப் பெற்று பயனடையலாம்.

இத்திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சி, வேலைவாய்ப்பை வழங்க உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT