அரசுப் பேருந்து மோதி சிமென்ட் ஆலை பாதுகாவலா் பலி
அரியலூரில் அரசுப் பேருந்து மோதியதில் சிமென்ட் ஆலை பாதுகாவலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அரியலூரில் அரசுப் பேருந்து மோதியதில் சிமென்ட் ஆலை பாதுகாவலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அரியலூா் ஜமுக்காள தெருவைச் சோ்ந்த சாமியப்பன் மகன் அண்ணாதுரை(53). அரியலூா் அரசு சிமென்ட் ஆலை பாதுகாவலா். இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அரியலூா் புறவழிச் சாலையை கடக்க முயன்ற போது, திட்டக்குடியில் இருந்து அரியலூருக்கு வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த கயா்லாபாத் காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.