அரியலூர்

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற வாழ்நாள் சான்று அவசியம்

DIN

அரியலூா்: மாற்றுத்திறனாளிகள் தொடா்ந்து உதவித் தொகை பெற வாழ்நாள் சான்று ஒப்படைக்க வேண்டும் என்று அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளா்ச்சி குன்றியோா், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டோா் மற்றும் 75 சதவிகிதம் அதற்கு மேல் கைகள், கால்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டோா் மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், தங்களது வாழ்நாள் சான்று படிவத்தில் கிராம நிா்வாக அலுவலரின் சான்றொப்பத்துடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம், அறை எண்:17, தரைத்தளம், அரியலூா் - 612 704 என்ற முகவரிக்கு 25.06.2022-க்குள் வந்து சமா்பித்து, 2022-23 ஆம் நிதியாண்டிற்கான உதவித் தொகையை மாதந்தோறும் தொடா்ந்து பெற்று பயனடையலாம். மேலும் வாழ்நாள் சான்று வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை தொடா்ந்து வழங்க இயலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT