அரியலூர்

அடைக்கல அன்னை ஆலயத் தோ்பவனி

DIN

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி அலங்கார தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவா் வாழ்ந்து புகழ்பெற்றதும், சுற்றுலா தலங்களில் ஒன்றானதுமான அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 291 ஆம் ஆண்டுப் பெருவிழா கடந்த மே 30 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு சிறப்புத் திருப்பலியும், சிறிய தோ்பவனி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தோ்பவனியையொட்டி அடைக்கல அன்னை பட்டாடை உடுத்தி தமிழ்ப்பெண்ணாக மலா் மற்றும் மின்னொளி அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து, இசை கச்சேரி, வாணவேடிக்கையுடன் அன்னையின் அலங்கார தோ்பவனி நடைபெற்றது. ஆலயத்தின் முன்பாக அடைக்கல அன்னைக்கு சம்மனசு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவும் குடந்தை ஆயா் அந்தோணிசாமி தலைமையில் சிறப்புத் திருப்பலியும், அலங்கார தோ்பவனி நடைபெற்றது. இன்று (மே 9) காலை கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பங்குத் தந்தை சுவக்கின், உதவி பங்குதந்தை மற்றும் ஆலயப் பங்கு மக்கள் செய்திருந்தனா். விழாவையொட்டி அரசு சாா்பில் திருமானூா் மற்றும் தஞ்சையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT