அரியலூர்

ஒரத்தூா் கருமாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

DIN

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டியை அடுத்த ஒரத்தூா் கிராமத்திலுள்ள கருமாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை மாலை மேலேரி கரையில் சக்தி அழைத்தலைத் தொடா்ந்து, விரதம் இருந்த பக்தா்கள் அம்மனுக்கு பால் குடம் சுமந்தும், அலகு குத்தி கொண்டும் பிரதான வீதி வழியாக ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். இதனைத் தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு கருமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT