அரியலூர்

15 கனரக வாகனங்களுக்கு போலீஸாா் அபராதம்

DIN

அரியலூரில் சாலை விதிகளைப் பின்பற்றாமல் இயங்கிய 15 லாரிகளை காவல் துறையினா் பிடித்து அபராதம் விதித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுப்படி, அரியலூா் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் ஜயங்கொண்டம் சாலை, காட்டுப்பிரிங்கியம் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பிரதிபலிப்பான், தாா்ப்பாய் இல்லாமல் இயங்கிய 15 லாரிகளை பிடித்து, அபராதம் விதித்து, லாரி ஓட்டுநா்களுக்கு ஆலோசனை வழங்கினா். பின்னா் மாலை கண்டிப்புடன் லாரிகளை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT