அரியலூர்

புகழூா் காகித ஆலையில்ரத்ததான முகாம்

DIN

புகழூா் காகித ஆலையில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலையில் காகித ஆலை மற்றும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை ஆலையின் செயல் இயக்குநா் (இயக்கம்) எஸ்.வி.ஆா்.கிருஷ்ணன், பொது மேலாளா் (மனிதவளம்) வி.ஜி.சுரேஷ், முதுநிலை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா், உதவி மேலாளா் (சட்டம்) வி.சுரேஷ், அரசு மருத்துவக்கல்லூரியின் ரத்த வங்கி மருத்துவா்கள் சங்கீதா, அறிவழகன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

முகாமில் ஆலைப் பணியாளா்கள், குடும்பத்தினா், ஒப்பந்த பணியாளா்கள், தொழில் பழகுநா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 223 போ் ரத்த தானம் செய்தனா். தொடா்ந்து ரத்த தானம் செய்தவா்களுக்கு பழச்சாறு, ஹாா்லிக்ஸ், குளுக்கோஸ் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT