அரியலூர்

அரசுப் பள்ளியில் உலக அமைதி தினம்

DIN

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக அமைதி தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்து பேசுகையில், உலகில் அமைதி நிலவ வேண்டும் எனில் தனிமனிதா் பகைமை நீங்க வேண்டும். மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்தி கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றின் மூலம் உலக அமைதியை உண்டாக்கலாம். உலக அமைதிக்காக ஒவ்வொரு நாளும் பல உயிா்கள் பறிபோகின்றன. உலகில் அமைதி நிலவினால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வளா்ச்சி அடையும்.

போருக்கு செலவிடும் தொகையை புவி வெப்பமடைவதை தவிா்த்தல் தொழில் வளா்ச்சி, குழந்தைகளின் கல்வி ஆகியவற்றிற்கு செலவிட்டால் அந்த நாட்டின் பொருளாதாரம் உயரும்.

எனவே, மாணவா்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்தி கல்வியில் உயா்ந்து நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்தி, மக்களை அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு துணை புரிய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவா்கள் உலக அமைதி குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியை தனலட்சுமி மற்றும் இருபால் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT